திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மகன், மகள் மற்றும் பேரக் குழந்தைகள் என குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில நாட்களாக மு.க.ஸ்டாலினை மாலத்தீவுக்கு சென்று ஓய்வு எடுக்குமாறு அவரது குடும்பத்தினர் அறிவுறுத்தி இருந்தனர். ஆனா ஸ்டாலின் இதில் தயக்கம் காட்டினார்.

ஏனெனில் மாலத்தீவு சென்று திரும்பினால் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டுமாம். மே 2-ந் தேதி வாக்கு எண்ணிக்கையும் வருகிறது. அதனால்தான் மாலத்தீவு செல்லும் யோசனையை நிராகரித்திருந்தாராம் ஸ்டாலின்.
கொடைக்கானலுக்கு நீண்ட நாட்களுக்கு பின்னர் ஸ்டாலின் வரும் தகவல் அங்குள்ள திமுகவினரை உற்சாகப்படுத்தி இருக்கிறது. கொடைக்கானலில் முகாமிட்டபடியேதான் தேர்தலுக்கு பிந்தைய பணிகள் தொடர்பாக விவாதிக்க இருக்கிறாராம் ஸ்டாலின்.
Be First to Comment