தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் பெரும்பாலும் ஹிந்தி தெரிந்த அலுவலர்களே பெரும்பாலும் பணியில் இருப்பதாகவும் தமிழ் தெரிந்த அலுவலர்களை நியமிக்க வலியுறுத்தியும், சிஐடியு சார்பில், பாலசுந்தரம் சாலையில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனத்தை CITU வினர் மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி மேலாளரை சந்திக்க ஏற்பாடு செய்ததையடுத்து முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர்.

செய்தியாளர்களிடம் பேசிய CITU மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, “மத்திய அரசு நிறுவனங்களான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், வங்கி, இரயில்வே போன்ற அலுவலகங்களில் ஹிந்தி தெரிந்தவர்களையே மத்திய அரசு பணியில், நியமிப்பதாகவும், இதனால் பொதுமக்கள் தொழிலாளர்கள் அந்தந்த அலுவலகங்களில் அலுவலர்களிடம் தொடர்பு கொண்டு சேவைகளை பெறுவதற்கு பெரும் சிரமம் ஏற்படுவதாவும், எனவே மத்திய அரசு தமிழகத்தில் தமிழ் தெரிந்த அலுவலர்களை நியமிக்க வேண்டும் என தெரிவித்தார். இல்லையெனில் தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம்” என கூறினார்.
Be First to Comment