கோடை விடுமுறை முடிந்து இன்று தமிழகம் முழுவதும் அரசு அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் கோவையில் சுமார் 2043 பள்ளிகளில் மாணவ மாணவியர் ஆர்வமுடன் வகுப்புகளில் பங்கேற்றனர்.
தமிழகம் முழுவதும் கடந்த மாதம் 5-ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை ஆண்டு இறுதி தேர்வு நடைபெற்று.

13-ஆம் தேதி முதல் ஒரு மாதம் கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. விடுமுறை நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன. அதனடிப்படையில் கோவை மாவட்டத்தில் 1212 அரசுப்பள்ளிகள் 177 அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் 654 தனியார் பள்ளிகள் என 2043 பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.
ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. மாவட்டம் முழுவதும் சுமார் 6 லட்சத்து 18 ஆயிரத்து 984 மாணவ மாணவியர்கள் உள்ள நிலையில் 80 சதவீதத்திற்கும் மேலான மாணவ மாணவியர் இன்று ஆர்வமுடன் பள்ளிக்கு சென்றனர்.

இன்று முதல் ஒரு வார காலத்திற்கு பாடங்கள் நடத்தப்படாது எனவும் அதேவேளையில் புத்துணர்வு பயிற்சி, நல்லொழுக்கம் , உளவியல் ரீதியிலான வகுப்புகள் மட்டும் நடத்தப்படும் எனவும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் கொரோனா பரவல் தமிழகத்தில் மெல்ல அதிகரித்து வரும் நிலையில் அனைத்து பள்ளிகளிலும் மாணவ மாணவியருக்கு உடல் பரிசோதனை செய்தபிறகே வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
அதேபோல் இன்று முதல் நாள் பள்ளி திறப்பு என்பதால் பல்வேறு பள்ளிகளிலும் மாணவ மாணவியருக்கு ஆசிரியர்கள் சார்பிலும் பள்ளி நிர்வாகங்கள் சார்பிலும் இனிப்புகள் வழங்கி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
Be First to Comment