தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் 7 உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து அரசானை வெளியிட கோரி, அகில இந்திய மள்ளர் எழுச்சி பேரவை உட்பட, தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.அண்மையில் மத்தியில் ஆளும் பா.ஜ.க.அரசு,தேவேந்திர குல வேளாளர் சமூக மக்களின் இந்த கோரிக்கையை ஏற்று, 7 உட்பிரிவுகளை இணைத்து அரசாணை வெளியிட்டது..இந்நிலையில்,தமிழகத்திற்கு,சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் JP . நட்டா, MP. வந்த நிலையில் அவரை நேரில் சந்தித்த அகில இந்திய மள்ளர் எழுச்சி பேரவை தலைவர் மனுநீதி சோழன் , தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் 7 உட்பிரிவுகளை ஒருங்கிணைந்து அரசாணை வெளியீடு செய்ததற்கு நன்றி தெரிவித்தார்..

மேலும் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க, மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டது..இதில் அவருடன், சிவகங்கை மாவட்டம் தேவேந்திர குல வேளாளர் உறவின் முறை நிர்வாகிகள், உஞ்சனை நாட்டாமை அருணாச்சலம் ,நீதி வர்மன் , தங்கபாண்டியர்,.சந்திர பாண்டியர்,.கார்த்திக் பாண்டியர், செல்லதுரை, .கருணாநிதி, அய்யாசாமி ,.அதிபதி , குமாரசாமி,.ஆறுமுகம் .கோவிந்தசாமி உட்பட பலர் உடனிருந்தனர்..தொடர்ந்து இந்த,சந்திப்பிற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்த பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் H. ராஜாவிற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது…
Be First to Comment