நேற்று தமிழக முதல்வராக பொறுப்பேற்ற முக ஸ்டாலின் ஐந்து கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் பெண்களுக்காக சாதாரண கட்டண அரசு பேருந்துகளில் பெண்கள் பயணிக்க இலவசம் என்று அறிவித்தார். இது பல்வேறு பெண்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில் அதனை கொண்டாடும் விதமாக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழக மகளிரணியினர் காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு “சொன்னதை செய்வார் ஸ்டாலின்” என்ற நோட்டீஸ் மற்றும் இனிப்புகளை வழங்கினர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தபெதிக மகளிரணி செயலாளர் லலிதா திமுக வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட நகர அரசு பேருந்துகளின் மகளிர் பயணம் செய்ய இலவசம் என்று அறிவித்ததை நிறைவேற்றி உள்ளார். இதற்கு தந்தை பெரியார் திராவிடர் க்ழக மகளிரணி சார்பில் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறோம் என்று தெரிவித்தார். இந்த திட்டம் பல பெண்களுக்கு பயன் தரும் என்று தெரிவித்த அவர் இதன் மூலம் மாதம் சுமார் 1000 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை மிச்சமாகும் என்று கூறினார். மேலும் தேர்தல் வாக்குறுதிகளை அவர் ஒவ்வொன்றாக நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையும் உள்ளது என்று தெரிவித்தார்.
Be First to Comment