மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-22-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டையினை தாக்கல் செய்து வருகிறார். அதில் அவர் நெடுஞ்சாலை திட்டம் தொடர்பாக கூறியது.
நாடு முழுவதும் 13 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைப் பணிகள் நடந்து வருகிறது. மார்ச் 2022 க்குள் 8,500 கி.மீ நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும். 11,000 கி.மீ தேசிய நெடுஞ்சாலை திட்டம் முடிக்கபப்டும்.
தமிழ்நாட்டில் ரூ 1.03 லட்சம் கோடியில் சாலை மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்படும். தமிழ்நாட்டில் 3,500 கி.மீ நீளத்துக்கு புதிய சாலைகள் அமைக்கப்படும். மதுரை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலை திட்டம் அடுத்த ஆண்டு செயல்படுத்தப்படும்.

கேரளாவில் 1100 கிமீ நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும். கேரளாவில் சாலை மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ65,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் சாலை மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ95,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் கூறினார்.
இன்னும் சில மாதங்களில் மூன்று மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பல லட்சம் கோடியில் சாலை மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று கூறியுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
Be First to Comment