இன்னொரு பிறவி உண்டென்றால் ; தமிழனாகப் பிறப்பேன் என்று 1939ஆம் ஆண்டில் மதுரையில் நடைபெற்ற பொது கூட்டத்தில் வீரமுழக்கமிட்டார் ; நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.
1897ஆம் ஆண்டு சனவரி 23ஆம் நாள் மேற்கு வங்கத்தில் பிறந்தார் சுபாஷ். 124ஆம் ஆண்டு பிறந்தநாளில் அவரை நினைவுக்கூர்வோம். பார்வர்ட்’ எனும் ஆங்கில் இதழில் ஆசிரியரான நேதாஜி, ஆங்கிலேயர் ஆட்சியின் அதிகாரத்துவத்தை எதிர்த்து உணர்ச்சி ததும்பும் பல கட்டுரைகளை எழுதினார்.

நேதாஜியின் நம்பிக்கைக்குரியவர்களாக பல தமிழர்கள் விளங்கி அவரது ராணுவத்திலும், அரசாங்கத்திலும் உயர் பதவிகளை வகித்தார்கள். தமிழர்கள் தனக்கு உறுதுணையாக நிற்பதைக்கண்ட நேதாஜி உள்ளம் நெகிழ்ந்தார். அதை மனம் விட்டும் கூறினார்: “அடுத்த பிறவியில் தமிழனாக பிறக்கவேண்டும் என விரும்புகிறேன் என்றார்”
Be First to Comment