உலக பிசியோதெரபி தினத்தையொட்டி தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் சார்பில் விருது வழங்கும் விழா – தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விருதுகளை வழங்கி கெளரவித்தார்.
உலக பிசியோதெரபி தினத்தையொட்டி , கோவை மண்டல அளவிலான அறிவியல் மையம் மற்றும் அறிவியல் அருங்காட்சியத்தில், தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற விருதுகள் வழங்கும் விழாவில், தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்துகொண்டு சென்னையை சேர்ந்த டாக்டர்.ஜெகதீசனுக்கு அப்துல்கலாம் விருதினையும், டாக்டர் .ரகுநாத்திற்கு இளம் சாதனையாளர் விருதினையும், கன்னியாகுமரியை சேர்ந்த டாக்டர்.ஆல்டரின் பிக்னாவிற்கு சிறந்த பிஸியோதெரபி மருத்துவர் விருதினையும், பிசியோதெரபி கல்லூரி முதல்வர்களுக்கு அங்கீகார விருதுகளை வழங்கினார்.

இதில், சங்கத்தின் மாநில தலைவர் டாக்டர்.ராஜா செல்வகுமார் வரவேற்புரையாற்றினார். மாநில பொதுச்செயலாளர் டாக்டர்.ராஜேஸ்கண்ணா நன்றியுரையாற்றினார். விழாவிற்கான ஏற்பாடுகளை சங்க நிர்வாகிகள் டாக்டர்.சுகன்யா தேவி, டாக்டர்.மஞ்சுளா ஆகியோர் செய்திருந்தனர்.
இதில், துணைமேயர் வெற்றிச்செல்வன், மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் Ex தளபதி முருகேசன், ரவி, டிஆர்.சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Be First to Comment