Press "Enter" to skip to content

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கரும்பு இனப்பெருக்கு நிறுவனம் மற்றும் தென்னை வளர்ச்சி வாரியம் இணைந்து, கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இன்று ‘உழவர்கள் கூட்டம்’ நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர் கலந்துகொண்டார். தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு. எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் வானதி சீனிவாசன், அமுல் கந்தசாமி, பொள்ளாச்சி ஜெயராமன், அம்மன் அர்ஜுனன் பங்கேற்றனர். இந்த விழாவில் பேசிய கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன்,தென்னை விவசாயிகள் மத்திய அமைச்சரிடம் கோரிக்கைகளை தெரிவிக்க வேண்டும். எனவே எங்கள் மாவட்டத்திற்கு வர வேண்டும் என மத்திய அமைச்சரிடம் கோரிக்கை விடுத்ததாக தெரிவித்தார்.விவசாயத்துக்கு மரியாதை குறைந்து வருகின்றது.விவசாயத்திற்கான மரியாதை, வருமானத்தை அதிகரிக்க வேண்டும் எனவும், மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசின் மூலமாக நிறைவேற்ற முடியும், மாநில அமைச்சர் மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டு நிறைய திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

இதனைதொடர்ந்து தமிழக வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பேசினார்.தென்னை விவசாயிகளுக்கு மாநில அரசால் அதிக உதவி செய்ய முடியவில்லை, தென்னை வாரியம் மத்திய அரசின் நேரடி கண்காணிப்பில் இருப்பதால் எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை எனவும் தெரிவித்தார். தமிழகத்தின் 41 இடங்களில் கொப்பரை கொள்முதல் செய்கின்றோம் என தெரிவித்த அவர், நாங்கள் மத்திய அரசுக்கு பரிந்துரை மட்டும்தான் செய்ய முடியும் எனவும் கூறினார். விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் இந்த அரசு தாக்கல் செய்கிறது, விவசாயத்தின் மீது தனி கவனம் செலுத்தி வருகின்றது இந்த அரசு என தெரிவித்த அவர்,தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில் வருங்கால பட்ஜெட் இருக்கும் என தெரிவித்தார். 25 ஆயிரம் மெட்ரிக் டன் கொப்பரை இது வரை கொள்முதல் செய்து இருக்கின்றோம், மத்திய அரசு அனுமதி கொடுத்தால் இன்னும் அதிகமாக கொள்முதல் செய்ய தயாராக இருக்கின்றோம் எனவும் தெரிவித்தார். ஆண்டு முழுவதிலும் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய தயாராக இருக்கின்றோம், மத்திய அமைச்சரிடம் பேசி வானதி சீனிவாசன் அனுமதி வாங்கி தர வேண்டும் எனவும் தெரிவித்தார்.

தென்னை வாரியம் மத்திய அரசிடம் இருப்பதால் விலை நிர்ணயத்தை அவர்கள் செய்கின்றனர், கொப்பரை தேங்காய் விலையை உயர்த்தி கொடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். தேங்காய் எண்ணெய்யை ரேசன்க டைகளில் விநியோகம் செய்வது தொடர்பாக கூட்டுறவு துறை அமைச்சரிடம் பேசி அதற்கு சாத்தியம் இருக்கின்றதா என பார்க்க வேண்டும் எனக்கூறிய அவர், தேங்காய் எண்ணெய் சாப்பிட்டால் ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயம் நம்மூர் மக்களிடம் இருக்கிறது எனவும் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் தெரிவித்தார். இறுதியாக பேசிய மத்திய வேளாண்மை துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ,’விவசாயம் நமது நாட்டின் முதுகெலும்பு. இதை பாதுகாப்பது மத்திய மாநில அரசுகளின் பொறுப்பு.தென்னை விவசாயம் என்பது நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது.தேங்காய் உற்பத்தில் இந்தியா 3 வது இடத்தில் இருக்கின்றது. இதில் தமிழகம் முக்கிய இடத்தில் குறிப்பாக கோவை முக்கிய இடத்தில் இருக்கின்றது.இந்தியா முழுவதும் 21 லட்சம் ஹெக்டேரில் தேங்காய் விவசாயம் நடைபெறுகின்றது.
தமிழகத்தில் மட்டும் 28 ஆயிரம் ஹெக்டேரில் தென்னை விவசாயம் நடைபெறுகின்றது.

தமிழகத்தில் தென்னை விவசாயத்தை மேம்படுத்த மத்திய அரசு உரிய உதவிகளை செய்யும். தென்னை விவசாயத்துக்கு எல்லாவிதமான உதவிகள் செய்தாலும், இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்படுகின்றது. அதற்கு உரிய இழப்பீடு மாநில அரசு மூலம் மத்திய அரசு கொடுக்கின்றது.கொரொனாவில் அனைவரும் பாதிக்கப்பட்டனர். பிரதமர் மோடியின் முயற்சியால் விவசாயதொழில் பாதுகாக்கபட்டது. விவசாயிகளுக்கு உரிய இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளது. கிஷான் கிரிடிட் கார்டு மூலம் விவசாயிகளுக்கான கடன் தொகை அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.விவசாயத்தின் உட்கட்டமைப்பிற்காக ஒரு லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது. அதை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். வானதி சீனிவாசன் கண்டிப்பாக தமிழகம் வர வேண்டும் என என்னை அழைத்தார். அதனால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது’ என மத்திய வேளாண்மை துறை அமைச்சர் கூறினார்.

More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications    OK No thanks