கோவை மாவட்டம் மதுக்கரை, மரப்பாலம் பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த மலைக்கோவில் ஸ்ரீ தர்மலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் ஆடிமாதம் முதல் வெள்ளி, மற்றும் ஆடி பௌர்ணமியை முன்னிட்டு மழையிலும் நனைந்தபடி பக்தர்கள் குழந்தைகளுடன், குடும்பத்தோடு கிரிவலம் சென்று சாமிதரிசனம் மேற்கொண்டனர். இந்த கோவிலில் கிரிவலம் செல்வது சிறப்பு வாய்ந்தது என்று பக்தர்கள் கூறுகிறார்கள். கடந்த இரண்டு வருடங்களாக கொரானா நோய்தொற்று காலம் என்பதால் கோவில் சாத்தப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும் தற்பொழுது நோய்த்தொற்று வழிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் சாதாரணமாக கிரிவலம் செல்ல 5 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவது வழக்கம் தற்பொழுது 500 முதல் ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுவதாகவும், திருக்கோவிலின் தர்மகர்த்தா கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
தர்மலிங்கேஸ்வரர் திருக்கோவிலின்
வான்வழி பார்வை வீடியோ
Be First to Comment