‘‘மண்டல பொறுப்பு எப்போது முடிவு ஆகும்….எப்போது உள்ளாட்சி பணிகள் தொடங்கும்?” என்பதுதான் குறிச்சியாரைப் பார்த்ததும் நாம் கேட்ட கேள்வி.
‘‘மண்டல தலைவர் பதவி நமக்குதான் கிடைக்க வேண்டும் என்று ஒவ்வொரு மாமன்ற உறுப்பினர்களும் சாமியைக் கும்பிட்டபடி இருக்கிறார்கள்.” என்ற குறிச்சியார் தொடர்ந்தார்.
‘‘நாளையே இறுதி ஆகலாம். அதற்குள் எத்தனையோ மாற்றங்கள் நடக்கலாம்.” அதுமட்டுமல்ல ‘உங்களுக்குதாண்ணே மண்டல தலைவர் கிடைக்கும்’ என ஆதரவாளர்கள் சொல்வதை போட்டியில் இருப்பவர்கள் நம்பவில்லை. சொல்பவர்களே கேட்டு இருப்பார்களோ என்ற சந்தேகத்துடந்தான் நாட்களை நகர்த்துகின்றனர் தி.மு.கவினர்.”
‘‘அப்படியா?”
‘‘ஆமாம். கடந்த காலங்களில் போட்டி அதிகம் இல்லாத மன்டலம் என்றால் அது தெற்கு மண்டலம்தான். ஆனால் தற்போது தெற்கு மண்டல தலைவர் பொறுப்புக்குதான் பலத்த போட்டியே நிலவுகிறதாம்.
‘‘எதை வைத்து அப்படிச் சொல்கிறீர்?”
குறிச்சி பகுதி பொறுப்பாளர்கள் தங்களுக்குதான் தலைவர் வாய்ப்பு என்று நினைக்கும் வேளையில் ”சாதி லாபி” செய்து பதவியை பிடித்து விடும் வேலையில் இருக்கிறார் ஒரு மாமன்ற உறுப்பினர் என்று ஏற்கனவே சொன்னேன் ஞாபகம் இருக்கிறதா?
‘‘ஆமாம்!”
சின்ன அமாவாசையாகவே ஆக வலம் அவர், உள்ளாட்சி தேர்தலில் கவுன்சிலர் சீட் கிடைக்க காரணமானவர் மீது தவறான அபிப்பிராயத்தையத்தை தலைமைக்கு ஏற்படுத்தியுள்ளாராம், எப்படியாவது மண்டல தலைவரை பெற்றுவிட வேன்டும் என அவர் செல்லாத ரூட் இல்லையாம். சென்னையில் இரண்டு நாள் முகாமிட்டு வேப்பேரி சாலையில் அய்யாவை பார்த்து, சி.ஐ.டி காலனி அக்காவின் நம்பிக்கையானவரை சந்திந்து, தான் கட்சி பணி மட்டுமின்றி சமூக சேவைகளை செய்வதாக எடுத்துரைத்து. வழக்கம் போல் எம்.எல்.எம் பாணியில் அவர்களிடம் பேசி கிட்டதட்ட தெற்கு மண்டல தலைவர் பொறுப்பை பெற்றிடும் நிலைக்கு வந்து விட்டாராம்.
‘‘ம்!”

இறந்தவர் வீட்டிற்கு முதலில் தேவைப்படுவது ஃபிரிஸர் பாக்ஸ்தான். அதனை இலவசமாக நான் தருகிறேன் என தம்பட்டம் அடித்து அதனையே பெரும் சமூக சேவை செய்வதாக சொல்கிறார். ஆனால் பலரிடம் வசூல் செய்து ஒரு அறக்கட்டளையை நிறுவி, அதன் மூலம் பொருட்களை வாங்கி வாடகைவிட்டு கொண்டு இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் வாடகை கட்டிடத்தையே தனதாக்க முயற்சித்தவர். இதெல்லாம் தலைமைக்கு தெரியாதா? அவருக்கு எப்படி மண்டல தலைவர் கொடுப்பார்கள்?
”இதையெல்லாம் விட கடந்த சில நாட்களாக பதவி பெற அவர் தேர்ந்தெடுத்த முறையை பார்க்க வேண்டும். சென்னை தவிர்த்து கொங்கு மண்டலத்தில் காங்கையத்துக்காரரையும், காரோட்டியாரையும், பெங்கலூராரையும் சந்தித்து எப்படியாவது எனக்கு சீட் பெற்று கொடுங்கள் என்று ஒரு பக்கம் சாதி லாபியையும், திராவிட சிந்தனையுள்ளவர்களை வைத்து கொண்டு ஒரு பக்கம் பெரியாரிய ஆதரவாளராகவும் பதவிக்காக இவர் போடும் வேஷத்தை கண்டு சிரிப்புதான் வருகிறது.”
”கட்சிக்காக எத்தனை முறை சிறை சென்று இருக்கிறார். கட்சி கொடுத்த பொறுப்பை திறம்பட செயலாற்ற முடியாமல் சொந்த கட்சியினரை அனுசரித்து போக முடியாமல் ராஜினாமா கடிதம் கொடுத்தவர்! அவருக்கு எப்படி மக்கள் பிரச்சனைகளை தீர்க்கும் திறன் இருக்கும் என்பதையெல்லாம் தலைமை யோசிக்காதா? என பொங்குகிறார்களாம் குறிச்சி தி.மு.கவினர்.
”ஓ”
எது எப்படியோ தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் உயர்தர பற்பசை விற்று கொண்டு இருந்த கோடீஸ்வரருக்கு கவுன்சிலர் சீட் வாங்கி கொடுத்து, வார்ட்டுக்குள்ளேயே போகாமல் வெற்றியும் பெற வைத்து, இந்த அளவுக்கு வளரவிட்ட பொறுப்பாளர் ஒருவருக்கு இவரால் தலைக்கு மேலே ”கத்தி” தொங்கி கொண்டிருக்கிறதாம் .
கத்தி ”மீனை” மட்டுமல்ல ஆளையே அரசியலில் இருந்து ”வெட்டும்” காலம் வரும். அதுவரை காத்திருக்கிறோம்” என ரைமிங்காக சொல்கின்றனராம் அரசியல் நோக்கர்கள். என்ற குறிச்சியார்.
”மீண்டும் சந்திப்போம்” என்றபடி கிளம்பினார் குறிச்சியார்!
Leave a Reply