ஒரே மேடையில் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, மன்மோகன் சிங், அப்துல் கலாம், காமராஜர், எம்.ஜி.ஆர்.,கலைஞர்,ஜெயலலிதா, மோடி,ஸ்டாலின் என உள்ளிட்ட பல்வேறு தலைவர்களின் வேடமிட்டு அசத்திய பள்ளி குழந்தைகள்

கோவை மாவட்டம், கோவைபுதூர் பகுதியில் உள்ள ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற 75 வது சுதந்திர தின விழாவில்,சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக இந்தியாவை ஆண்ட அரசர்கள் துவங்கி,சுதந்திர போராட்ட தியாகிகள்,மறைந்த மற்றும் இந்நாள் அரசியல் தலைவர்கள்,கலை மற்றும் விளையாட்டு துறையை சேர்ந்த பிரபலங்கள் என 75 பேர்களின் வேடமிட்ட பள்ளி குழந்தைகள் மேடையில் தோன்றினர்.

இதில்,முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி,மன்மோகன் சிங்,மற்றும் மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாம், தமிழகத்தின் முன்னால் முதல்வர்கள் காமராஜர்,எம்.ஜி.ஆர்.,கலைஞர்,ஜெயலலிதா மற்றும் தற்போதைய பிரதமர் மோடி,தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்,ஜனாதிபதி முர்மு ,கிரிக்கெட் வீரர் சச்சின்,சானியா மிர்சா,விஸ்வநாதன் ஆனந்த் என 75 குழந்தைகள் வேடமிட்டு இந்தியா வரைபடம் போல் நின்றனர்.

நடுவில் பாரத தாய் அமர்ந்துள்ளதை அனைத்து தலைவர்களும் வணங்குவது போல் இருந்ததை அங்கிருந்த பொதுமக்கள் கண்டு ஆராவாரம் செய்தனர்.
Be First to Comment