கிணத்துக்கடவு சட்டமன்ற தி.மு.க வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் அறிமுக கூட்டம் மதுக்கரை மைதானத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய தி.மு.க வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் ”இதுவரை தாமோதரனோ, எட்டிமடை சண்முகமோ இந்த தொகுதிக்கு என்ன செய்து கொடுத்தீர்கள் கூற முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.
”பணத்தை மட்டுமே அ.தி.மு.கவினர் நம்பி உள்ளனர். பணத்தை கொடுத்து வாக்கை பெற்று விடலாம் என்று நினைக்கிறார்கள். அது நடக்காது என்று கூறி கொள்கிறேன்.” என்றார்
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய செயலாளர்கள், பகுதி செயலாளர்கள், தி.மு.க மாவட்ட அமைப்பாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளனமானோர் கலந்து கொண்டனர்.
மேலும் கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு கிணத்துக்கடவில் தி.மு.க வேட்பாளர் குறிச்சி பிரபாகரனை அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற பணியாற்றுவோம் என கூறினர்.
Be First to Comment