கோவையில் மாற்றுத்திறனாளிகள் நலன் மற்றும் அவர்களின் எதிர்காலம் கருதி தினமேகம் அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. கொரோனா கால இரண்டாம் அலையின் போதும் பாதிப்படைந்த மாற்றுத்திறனாளிகள் குடும்பத்தினர்களுக்கு அவர்களின் இருப்பிடம் சென்றே உதவிகள் செய்து வருகின்றனர். இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள் குடும்பத்தினர்களுக்கு புத்துணர்வு அளிக்கும் வகையில் தினமேகம் அறக்கட்டளை சார்பாக விளையாட்டு போட்டி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கோவை பாலத்துறை பகுதியில் உள்ள கலைவாணி மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
முன்னதாக விளையாட்டு போட்டிகளக கலைவாணி கல்வி குடும்பத்தின் தலைவர் ஆர்.கிருஷ்ணசாமி துவக்கி வைத்தார்.
இதில் குண்டு எறிதல் வட்டு எறிதல் ஓட்டப்பந்தயம் பாட்டு கவிதை கட்டுரை போட்டிகள் என பல்வேறு போட்டிகள் நடைபெற்றன இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சுமார் 100 மாற்றுத்திறனாளிகள் குடும்பத்தினர்களுக்கு, அரிசி மளிகை காய்கறி தொகுப்புகள் வழங்கும் விழா நடைபெற்றது.
தினமேகம் அறக்கட்டளையின் நிறுவன தலைவர் மருத்துவர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தி.மு.க.கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி,ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி ராமச்சந்திரன்,ஆகியோர் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி,மளிகை,காய்கறிகள் அடங்கிய தொகுப்புகளை வழங்கினர்.நிகழ்ச்சியில்,மதுக்கரை வணிகர் சங்கம் நிர்வாகிகள் செந்தில் மற்றும் செல்வம்,மதுக்கரை ஒன்றிய துணை பெருந்தலைவர் எம்.ஆர்.ஆர்.பிரகாஷ்,போட்டோகிராபர் ஜான்,மற்றும் தினமேகம் அறக்கட்டளை நிர்வாகிகள்,உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Leave a Reply