கோவை திருச்சி சாலையில் 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண பொருட்களை தி.மு.க மாநில மகளிர் தொண்டரணி துணைச்செயலாளர் மீனா ஜெயக்குமார் வழங்கினார்.
கொரோனா பேரிடர் காலத்தில் பொதுமக்கள் பாதிக்காத வண்ணம் அனைவருக்கும் தேவையான உதவிகளை தி.மு.க-வினர் செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதன்படி, கோவை – திருச்சி சாலை ரெயின்போ உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு, அரிசி, மளிகை பொருட்கள், காய்கறி தொகுப்புகள், நிவாரண தொகை மற்றும் மதிய அசைவ உணவுகளை தி.மு.க மாநில மகளிர் தொண்டரணி துணைச்செயலாளர் மீனா ஜெயக்குமார் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், பாலு, பைசல், முரளி, சுதாகர், மகளிர் தொண்டரணி அமைப்பாளர் மேரி ராணி மற்றும் வாசுகி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Be First to Comment