கோவை மாநகர்,நேரு விளையாட்டு அரங்கத்தில் மங்கையானவன் அறக்கட்டளை சார்பில் திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் பங்கேற்ற “TRANS MARATHAN -2022” ஓட்டப்பந்தயப் போட்டி நடந்தது.
இதனை கோவை மாநகர் கிழக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான நா. கார்த்திக் துவக்கி வைத்து வாழ்த்திப் பேசினார்.

கோவை மாநகராட்சி பொது சுகாதாரக்குழு தலைவர் பி.மாரிச்செல்வன், 83 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சுமா விஜயகுமார், திமு.க வட்டப் பொறுப்பாளர்கள் விஜயகுமார், ராமநாதன்,அன்னம்மாள், சீனிவாசன், காவல் ஆய்வாளர் ஜெயதேவி,மங்கையானவன் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.

Be First to Comment