சென்னையில் நடைபெற்ற நாதஸ்வரக் கலைஞர் டி.என்.ராஜரத்தினம் கொள்ளுப்பெயரனும்; ஜெயந்தி சரவணன் – சரவணன் மகனுமாகிய கருணாரத்தினம்- காவ்யா ஆகியோரின் திருமணம் சென்னையில் நடைபெற்றது.
தி.மு.க தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் தலைமையேற்று மணவிழாவை நடத்தி வைத்தார்.
திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘முதலில் என்னுடைய துணைவியாருக்கு நான் பிறந்தநாள் வாழ்த்து சொல்ல விரும்புகிறேன். இரவு 12 மணிக்கே சொல்லிவிட்டேன். இருந்தாலும் எல்லோரும் மேடையில் சொன்னார்களே, நீங்கள் மட்டும் சொல்லவில்லையே என்று வீட்டிற்குச் சென்று பிறகு கேட்டுவிடக்கூடாது. பயந்து அல்ல, எல்லோரும் வாழ்த்திய அந்த அடிப்படையில் இன்றைக்கு 63-வது வயதில் அடியெடுத்து வைத்திருக்கும் என்னுடைய துணைவியாருக்கு உங்களோடு சேர்ந்து நானும் என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்” என்று எடுத்த எடுப்பிலேயே நிகழ்ச்சியை கலகலப்பா பேசினார்.
Be First to Comment