விரைவில் சினிமாவாக , தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்க்கையை எடுப்பதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக முக்கிய பிரபலம் தகவல் வெளியிட்டுள்ளார்.ஸ்டாலின் பயோபிக் எடுக்கும் வேலைகள் விரைவில் துவங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை ‘தலைவி’ என்ற பெயரில் சமீபத்தில் படமாக்கப்பட்டது. ஜெயலலிதாவின் வாழ்க்கையை பலரும் ஒரே சமயத்தில் சினிமாவாக எடுத்தனர். தமிழ் சினிமாவில் பயோபிக் வருகை அதிகரித்து வருகிறது.

அந்த வரிசையில் தற்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கையை சினிமாவாக எடுக்க போகிறார்களாம். இந்த தகவலை வெளியிட்டிருப்பதும், இதை படமாக எடுக்க போவதும் வேறு யாரும் இல்லை நடிகரும், தயாரிப்பாளரும், எம்எல்ஏ.,வுமான உதயநிதி ஸ்டாலின் தான்.

உதயநிதி தனது கருத்தை கூறுகையில், என் அப்பாவின் கேரக்டரும், டான் படத்தில் சமுத்திரக்கனியின் கேரக்டரும் ஒன்று தான். ஆனால் என்ன ஒரு வித்தியாசம் என்றால் என் அப்பா மிகப் பெரிய சினிமா விரும்பி. எல்லா படங்களையும் உடனடியாக பார்த்து விடுவார். ஆனால் நான் படம் எடுப்பதை அவர் விரும்பவில்லை. என்னை இயக்குனர் ஆக வேண்டாம் என தடுத்தார் அவர். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் ஆரம்பத்தில் எனது இன்ஜினியரிங் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு, இந்திய சினிமா பயிற்சி பள்ளியில் சேர விரும்பினேன் என்றார்.
டான், ஏகே 61 என அடுத்தடுத்து பெரிய படங்களில் சமுத்திரக்கனி கமிட்டாகி வரும் நிலையில் ஸ்டாலின் பயோபிக்கிலும் சமுத்திரக்கனி நடிக்க உள்ளதாக கூறப்படுவது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் யாருடைய ரோலில் யார் நடிக்க போகிறார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்களும், திமுக தொண்டர்களும் ஆர்வம் காட்ட துவங்கி விட்டனர். அரசியல் வட்டாரத்திலும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Be First to Comment