Press "Enter" to skip to content

தி சென்னை சில்க்ஸ்-ன் சார்பில் ரூ.1 கோடி நிவாரண நிதி

தி சென்னை சில்க்ஸ்-ன் சார்பில், கொரோனா நிவாரண நிதியாக தமிழக அரசுக்கு ரூ.1 கோடிக்கான காசோலையை தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு அளித்தனர்.
இது குறித்து தி சென்னை சில்க்ஸ்-ன் நிர்வாகத்தினர் கூறுகையில், ”தி சென்னை சில்க்ஸ் பல்வேறு சமூக பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. கொரோனா முதல் அலை வந்த கடந்த ஆண்டும், பல்வேறு நிவாரணப்பணிகளில் முழு மூச்சுடன் செயல்பட்டோம். தமிழகத்தில் கொரோனா பேரிடர் எதிர்கொள்ள நிவாரண நிதியாக அனைவரும் பங்களிப்பு செய்ய வேண்டும் என ஊடகங்கள் வாயிலாக முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். அதன்படி, தி சென்னை சில்க்ஸ்-ன் சார்பில் 1 கோடி நிவாரண நிதியை தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு காசோலை மூலம் அளிக்கப்பட்டது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையின் கீழ் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், அனைத்து துறை சார்ந்தவர்களும், களப்பணியாற்றி வரும் முன்களப்பணியாளர்கள்,தன்னார்வலர்கள் போன்ற அனைவரும் ஒன்றிணைந்து கொரோனா தொற்று பரவல் தடுப்பு பணிகளில் போர்க்கால அடிப்படையில் இரவு, பகலாக ஓய்வின்றி சிறப்பாக பணிபுரிந்து வருவதை தி சென்னை சில்க்ஸ்-ன் சார்பில் பாராட்டுக்களையும், நன்றியும் தெரிவித்து கொள்கிறோம்.” என்றனர்.

More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications    OK No thanks