கோவை ஈச்சனாரியில் அமைந்திருக்கும் லிண்டஸ் கார்டன்ஸ் கல்யாண மண்டபத்தில் இன்று காலை ஓம் சரவணபவா சுவாமியின் 41வது ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ட்ரஸ்ட் சார்பாக ஆயிரம் ஏழைகளுக்கு அன்னதானம் மற்றும் 15 வகையான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. முன்னதாக குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி ரங்கநாதன், 100வது மாமன்ற உறுப்பினர் இரா.கார்த்திகேயன், 96 வது வார்டு மாமன்ற உறுப்பினர், குணசேகரன், 97 வது வார்டு தி.மு.க வட்ட கழக பொறுப்பாளர் ஈச்சனாரி மஹாலிங்கம் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.

இதையடுத்து பொதுமக்களுக்கு மளிகை பொருட்களை வழங்கி நிகழ்ச்சியை தனலட்சுமி ரங்கநாதன், இரா.கார்த்திகேயன் துவக்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் சுரேஷ், ஆட்டோ ராஜ், சந்துரு, சின்னசாமி, கிட்டுசாமி,முருகன், ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Be First to Comment