தி.மு.க ஒருங்கிணைந்த கோவை மாவட்டம் பேரூர் கழக, நகர கழக வார்டுகள் கழக அமைப்பு தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் விண்ணப்பப் படிவங்கள் வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, ”நாளை 22.04.2022 காலை 9.00 மணியிலிருந்து மாலை 5.00 மணி வரை தி.மு.க கோவை மாவட்டம் தலைமைக் கழக தேர்தல் பொறுப்பாளர்கள், சட்ட திட்ட திருத்தக் குழு உறுப்பினர் , சுபா.சந்திரசேகர், தலைமை செயற்குழு உறுப்பினர், கா.தனசேகரன் எம்.சி, தீர்மான குழு இணைச்செயலாளர், தேனி எம்.ஜெயக்குமார், ஆகியோரது அறிவுறுத்தல்படி விண்ணப்பப் படிவங்கள் தலைமைக் கழக ஆணையாளர்களால் அந்தந்த நகரக் கழக அலுவலகங்கள், பேரூர் கழக அலுவலகங்களில் வழங்கப்பட உள்ளது.
நாளை வழங்கப்பட உள்ள விண்ணப்பப் படிவங்களை நிர்வாகிகள் பெற்றுச் சென்று, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை 23.04.2022 மற்றும் 24.04.2022 ஆம் தேதிகளில் அந்தந்த மாவட்டக் கழக அலுவலகங்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை தலைமைக் கழக பிரதிநிதிகளிடம் விண்ணப்பப் படிவங்கள் மற்றும் கட்டணங்களைச் செலுத்தி ரசீதுகளை பெற்றுக் கொள்ளலாம்” என கோவை மாவட்ட பொறுப்பாளர்கள் கூறியுள்ளனர்.

தி.மு.க அமைப்பு தேர்தல் விண்ணப்ப விநியோகம்! | tamilnews
More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »
- இந்திய ரயில்வே துறை மற்றும் தபால் துறை இணைந்து துவங்கியுள்ள, புதிய பார்சல் சேவை குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள சேம்பர் டவர்ஸ் அரங்கில் நடைபெற்றது.
- இலவச பேருந்துகளில் வேண்டுமென்றே அரசு பெயரை கெடுக்க, 100க்கு 99 சதவீதம் தவறாக சித்தரிக்கின்றனர் – கோவையில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா பேட்டி.
- விலைவாசி அதிகரிப்பை கண்டித்து, கோவையில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
- இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, விவசாயிகள் சங்கம் ஆர்ப்பட்டம்!
- காவலர் கொல்லப்பட்ட தினம், மாநகரப் பகுதியில் போலீசார் தீவிர சோதனை…!
Be First to Comment