மொழிப்போர் தியாகி மு.மா.சண்முகசுந்தரத்தின் 3 ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நிலத்திட்ட உதவிகள் வழங்கி அவரது படத்திறகு மரியாதை – மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் உள்ளிட்ட தி.மு.க.வினர் பங்கேற்பு.
கோவையில் தி.மு.க மூத்த முன்னோடியும், மொழிப்போர் தியாகியுமான மு.மா.சண்முகசுந்தரத்தின் 3 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. உக்கடம் டான்பாஸ்கோ அன்பு இல்லத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு இடங்களில் மொழிப்போர் தியாகி மு.மா.சண்முகசுந்தரத்திற் திருவுருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து, டாடாபாத்தில் உள்ள மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் மு.மா.சண்முகசுந்தரத்தின் திருவுருவ படத்திற்கு, கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் மலரஞ்சலி செலுத்தினார்.
இதில், பொதுக்குழு உறுப்பினர் மு.மா.ச.முருகன், பகுதி கழக பொறுப்பாளர்கள் சேதுராமன், பாலசுப்பிரமணியம், நாகராஜ், தேவசீலன், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் கண்ணன்,ஆனந்த் மற்றுட் ஆர்.எஸ்.புரம் பூபாலன், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
Be First to Comment