சட்டமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் தொகுதி பங்கீடுகள் பற்றிதான் தற்போது அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பான பேசபொருளாக உள்ளது. அ.தி.மு.க பா.ஜ.க கூட்டணி உறுதியான நிலையில், பா.ம.கவுடனும் பேச்சுவார்த்தையினை அ.தி.மு.க தரப்பு தொடங்கி விட்டதாக கூறுகின்றனர். இந்த நிலையில் தி.மு.க கூட்டணியில் உள்ள கட்சிகள் தங்களுக்கான எதிர்ப்பார்ப்பினை கேட்டு பெறுவதில் உறுதியாக உள்ளன.

தி.மு.க கூட்டணியில் உள்ள ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், இந்திய ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் இடம்பெற்றுள்ளன. சீட் பங்கீட்டிற்கான பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கப்படாத நிலையில், ம.தி.மு.க 12 சீட்களை கேட்டு பெற வேண்டும் என முடிவில் உள்ளதாம்.
அவ்வப்போது கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது தி.மு.க. அரக்கோணத்தில் தி.மு.க எம்.பி -க்கு சொந்தமான இடத்தில் வைத்து பேசிய போது சீட் பங்கீடு குறித்து சில கருத்துகள் பேசப்பட்டுள்ளது.
அதில்தான் ம.தி.மு.க 12 சீட் கேட்பதையும், அண்ணா நகர், சாத்தூர், காரைக்குடி, மயிலாடுதுறை, வாசுதேவநல்லூர், பாளையங்கோட்டை, பட்டுக்கோட்டை, கிணத்துக்கடவு உள்ளிட்ட தொகுதிகளை பெற்றிட வேண்டுமென எதிர்ப்பார்க்கின்றனராம்.
தி.மு.க தரப்போ ம.தி.மு.கவிற்கு 8 தொகுதிகளை மட்டுமே தர முடிவெடுத்துள்ளதாம். தி.மு.க கூட்டணியில் பிப்ரவரி இறுதிக்குள் சீட் பங்கீடு பேச்சுவார்த்தை முடிவடைந்து பிரசாரம் சூடுபிடிக்குமாம்.
ஏற்கனவே தி.மு.க சார்பில் கிணத்துக்கடவு தொகுதியின் வேட்பாளர் யார்? என ரேஸில் சிலர் இருக்க. தொகுதியினை வை.கோ கேட்பதை அறிந்து உள்ளூர் தி.மு.கவினர் பதட்டத்தில் உள்ளனராம்.
Be First to Comment