கொரோனா கால பேரிடர் காலத்தில் போதிய வருமானம் இல்லாமல் தவிப்பவர்களுக்கு ஒண்றிணைவோம் வா.. எனும் திட்டத்தில் தி.மு.க.வினர் உதவி செய்ய வேண்டும் என தமிழக முதல்வரும் தி.மு.க.தலைவரும் ஆன மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் அவரது ஆணைப்படி,கோவை தி.மு.க மாநகர் மேற்கு மாவட்டம்,வடக்கு சட்டமன்ற தொகுதி,சாய்பாபாகாலனி பகுதி கழகம் சார்பாக 11 வது வட்டம் கே.கே.புதூர் பகுதியில் பொதுமக்களுக்கு இலவச அரிசி மற்றும் சமையல் எண்ணெய்,பருப்பு உள்ளிட்ட அடங்கிய மளிகை தொகுப்புகள் வழங்கும் விழா நடைபெற்றது.
கொரோனா கால விதிமுறைகளை பின்பற்றி நடைபெற்ற இதில் சாய்பாபாகாலனி பகுதி பொறுப்பாளர் கே.எம்.ரவி தலைமை தாங்கினார். இதில் கோவை மாநகர் மேற்கு மாவட்ட தி.மு.க.பொறுப்பாளர் பையா ஆர்.கிருஷ்ணன் மற்றும் பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபீக் , ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.தொடர்ந்து கழக கொடியேற்றி விழாவை துவக்கி வைத்து, பொதுமக்களுக்கு அரிசி மற்றும் மளிகை தொகுப்புகளை வழங்கினர்.முன்னதாக பொதுமக்கள் அனைவருக்கும் முக கவசங்கள் வழங்கி,அனைவரும் இருக்கையில் அமர வைத்து சமூக இடைவெளியுடன் நிகழ்ச்சி நடைபெற்றது.
Be First to Comment