பல்சமய நல்லுறவு இயக்கத்தின் நிறுவன தலைவர் முகம்மது ரபீக், தி.மு.க.மாநகர் மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக்கை சந்தித்தார்.
கோவையை தலைமையிடமாக கொண்டு பல்சமய நல்லுறவு இயக்கம் எனும் அமைப்பு சார்பாக பல்வேறு சமூக நலப்பணிகளை செய்து வருபவர் அதன் நிறுவன தலைவர் முகம்மது ரபீக். குறிப்பாக கொரோனா கால நேரத்தில் உணவின்றி தவிக்கும் ஆதரவற்றோர் மற்றும் தூய்மை பணியாளர்கள் உட்பட பல்வேறு துறை சார்ந்த முன்கள பணியாளர்களுக்கு முட்டையுடன் பிரியாணி வழங்கி அனைவரின் பாராட்டுதலையும் பெற்றவர். இந்நிலையில் முகம்மது ரபீக் , முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தி.மு.க.மாநகர் மாவட்ட பொறுப்பாளருமான நா.கார்த்திக்கை மரியாதை நிமித்தமாக சென்று சந்தித்தார்.
Be First to Comment