கோவையில் நிலவும் உச்சகட்ட கோஷ்டி மோதலால் உண்ணாவிரத போராட்டம் வரை சென்றுள்ளது கோவை தி.மு.க. தி.மு.க பொறுப்பாளரை கண்டித்து தி.மு.க-வின் தலைமையின் கவனத்திற்கு கொண்டு செல்ல தி.மு.க-வினரே உண்ணாவிரதம் இருப்பதால் கோவையில் பரபரப்பு.

கோவையில் தி.மு.க மேற்கு பகுதி பொறுப்பாளராக உள்ள பையா கவுண்டர் என்ற கிருஷ்ணன். இவரை எதிர்த்து தி.மு.க-வை சேர்ந்த மாணிக்கம் என்பவர் தலைமையில் தி.மு.க-வினர் பையா கவுண்டரை கண்டித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கோவை கோல்டு வின்ஸ் பகுதியில் தி.மு.க சார்பாக நடக்க உள்ள புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள தி.மு.க துணை பொதுசெயலாளர் ஆ.ராசா, மற்றும் தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் கோவை வரும் நேரத்தில் தி.மு.க-வினரின் இந்த கோஷ்டி மோதல் உண்ணாவிரத போராட்டத்தால் தி.மு.க தலைமை கலங்கிபோய் உள்ளது.
கோவை மாவட்டத்தில் பல்வேறு கோஷ்டிகளாக தி.மு.க செயல்படுவதால் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் இது மிகப்பெரிய தாக்கத்தை தி.மு.கவிற்கு ஏற்படும் என்கின்றனர் அரசியல் வல்லுநர்கள்.
Be First to Comment