“நீ வேலுமணி அனுப்பிய ஆளா?”
தொண்டாமுத்தூர் தொகுதியில் நடைபெற்ற தி.மு.க-வின் கிராமசபை கூட்டத்தில் ஸ்டாலினிடம் கேள்வி கேட்ட பெண்ணை பார்த்து ஸ்டாலின் கேட்டதுதான். “நீ வேலுமணி அனுப்பிய ஆளா?”
தற்போது அந்த கேள்வியே தி.மு.க-வின் கிணத்துக்கடவு வேட்பாளராக விருப்ப மனு கொடுத்தவர்களிடம் கேட்க வேண்டிய நிலையில் ஸ்டாலின் உள்ளார்.
தி.மு.க-வில் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக மருதமலை சேனாதிபதி நியமிக்கப்பட்டது முதலே கிணத்துக்கடவு தொகுதியில் உட்கட்சி பூசல் அதிகரித்து விட்டது.
தற்போது சட்டமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் அது உக்கிரமடைந்து சொந்த கட்சியினரே அவர்களுக்குள் சமூக வலைதளங்களில் பரப்பு படங்களும், செய்திகளும் தி.மு.க தலைமையையே அதிர்ச்சிடைய செய்துள்ளது.
கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் மருதமலை சேனாதிபதி உதயநிதி ஸ்டாலினை அழைத்து தனது புதுமனை புகுவிழாவினை நடத்தினார். அந்த புதுமனைக்கு அமைச்சர் வேலுமணியின் அண்ணன் அன்பரசன் வந்ததாகவும், தம்பதி சகிதமாக அவரிடம் ஆசி பெற்றதாகவும் ஒரு செய்தி அப்போது பரவலாக பேசப்பட்டது.
தற்போது சமூக தளங்களில் அமைச்சர் வேலுமணியின் அண்ணன் அன்பரசனுடன் சிரித்தப்படி மருதமலை சேனாதிபதி தனது தனிப்பட்ட நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருக்கும் படம் வைரலாக பரவி வருகின்றது. திமு.கவின் அடிமட்ட தொண்டர்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதைப்பற்றி வேதனையுடன் தி.மு.கவின் மகளிரணியினர் விரக்தியுடன் பேசும் ஆடியோவும் வைரலாகி வருகின்றது.
இதே போல் குறிச்சி பிரபாகரன் குறிச்சி நகராட்சி தலைவராக 10 வருடங்களுக்கு முன் இருந்த போது நடைபெற்ற அரசு சம்மந்தமான விழாக்கள் மற்றும் தற்போது நடந்த பொது நிகழ்ச்சிகளில் அ.தி.மு.கவினருடன் குறிச்சி பிரபாகரன் இருக்கும் படங்களை சிலர் காரணமின்றி வெளியிட்டு தி.மு.கவிற்கு கெட்ட பெயரை ஏற்படுத்த முனைவதாகவும் குறிச்சி தி.மு.கவினர் வருத்தமடைகின்றனர்.
இந்த நிலையில் கிணத்துக்கடவு தொகுதியில் தி.மு.கவின் வேட்பாளர் அமைச்சர் வேலுமணியின் ஆதரவாளரா? தி.மு.வைச் சேர்ந்தவரா? என்ற பட்டிமன்றமே நடத்தி வருகின்றனர் உடன்பிறப்புகள்.
Be First to Comment