கிணத்துக்கடவு தொகுதியில் கடந்த முறை தி.மு.க சட்டமன்ற வேட்பாளராக நின்றவர் குறிச்சி பிரபாகரன். கோவை குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். பி.காம் படித்துள்ளார். விவசாயம் மற்றும் வணிகத் தொழில் செய்து வருகிறார்.
2005 முதல் 2011 வரை குறிச்சி நகராட்சித் தலைவராக இருந்துள்ளார். தி.மு.க-வில் 2005 முதல் குறிச்சி நகர திமுக செயலாளராகவும், 2014 முதல் குறிச்சி பகுதி திமுக செயலாளராகவும் இருந்தவர். 2020 முதல் தற்போது கோவை தி.மு.க கிழக்கு மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினராக உள்ளார். சென்ற முறை குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் தோல்வியைச் சந்தித்தார். மீண்டும் இந்த முறை அவருக்கு கட்சி வாய்ப்பு கொடுத்துள்ளது.

மூன்று தலைமுறைகளாக திராவிட கொள்கையில் இருந்து வரும் குடும்பத்தை சேர்ந்தவர் என்பதாலும், சென்ற முறை தொகுதியில் போட்டியிட்டவர் என்பதாலும் தொகுதி முழுக்க நல்ல பிரபலமாக உள்ளார்.
Be First to Comment