கோவை மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களின் கோரிக்கை தொடர்பாக ஆணையாளர் அதற்கான குழுவை அமைத்து குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என கோவை வந்த தேசிய தூய்மைப் பணியாளர் ஆணைய குழுவின் தலைவர் வெங்கடேசன், தெரிவித்துள்ளார்.
கோவை வந்த தேசிய தூய்மைப் பணியாளர் ஆணைய குழுவின் தலைவர் வெங்கடேசன், மாநகராட்சி தூய்மை பணியாளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது தூய்மை பணியாளர்களிடையே பேசிய அவர்,பணி நேரத்தின் போது உள்ள பிரச்னைகளை கூற வேண்டும் எனவும், அப்போதுதான் குறைகளை நிவர்த்தி செய்ய முடியும் என கூறிய அவர், தூய்மை பணியாளர்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்க வேண்டாம் எனவும் உரிமைகளை கேட்டு பெற்றுக் கொள்ளுங்கள் என குறிப்பிட்டார்.
தொடர்ந்து அவரிடம்,வார நாட்களில் விடுமுறை கொடுப்பதில்லை, பி.எஃப் பணம் எங்களுக்கு கிடைப்பதில்லை என தூய்மைப் பணியாளர்கள் அவரிடம் புகார் தெரிவித்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியவர், தூய்மைப் பணியாளர் ஆணைக்குழுவின் தலைவர் வெங்கடேசன் ,தேசிய தூய்மைப் பணியாளர்கள் சார்பாக இரண்டு நாள் சுற்றுப்பயணம் நேற்று நீலகிரி மாவட்டம் இன்று கோவை மாவட்டத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது தூய்மை பணியாளர்களை சந்தித்து அவர்களது கோரிக்கைகளை கேட்டு வருகிறேன் முக்கியமான பிரச்சனை 10 வருடம் பணியாற்றினாலும் எங்களுக்கு பி.எஃப் பணம் பிடித்து வருகிறார்கள்.
ஆனால் அந்த பணம் என்ன ஆனது என தெரியவில்லை என தூய்மை பணியாளர்கள முக்கியமான கோரிக்கையாக எழுப்பியுள்ளனர்.
கோவை மாநகராட்சி ஆணையாளர் அதற்கான குழு அமைத்து யார் யாருக்கு பணம் பிடித்தார்கள் என கேட்க வேண்டும் அந்த பணத்தை மீட்டு அந்த அந்த பணியாளருக்கு தரவேண்டும் என ஆணையரிடம் கூறியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
Be First to Comment