கோவையில் தூய்மை பணியாளர்களின் பணியை ஊக்குவிக்கும் விதமாக சர்வதேச யுனிசெப் கவுன்சிலுடன் இணைந்து கோவைபுதூர் யூத் அசோசியேஷன் இளைஞர்கள் இலவச அரிசி மூட்டைகளை தூய்மை பணியாளர்களுக்கு வழங்கினர்.
கோவையில் கொரோனா தொற்று தற்போது படிப்படியாக குறைந்து வரும் நிலையில், நோய் தொற்று பாதித்துள்ள பகுதிகளில் தங்களின் உயிரை பொருட்படுத்தாமல் பணி செய்து வரும் தூய்மை பணியாளர்கள்,செவிலியர்கள்,காவலர்கள் ஆகிய முன்கள பணியாளர்களை இண்டர்நேஷனல் யுனிசெப் கவுன்சில் தொடர்ந்து கவுரபடுத்தி வருகின்றது.

இந்நிலையில் இவர்களுடன் இணைந்து கோவை புதூர் யூத் கவுன்சில் இளைஞர்கள் கோவை மாநகராட்சி 90 ஆம் வார்டுகளில் பணியாற்றும் சுமார் 50 தூய்மை பணியாளர்களுக்கு ஐந்து கிலோ அரிசி மூட்டைகளை வழங்கினர்.கொரோனா கால ஊரடங்கு விதிமுறைகளை கடைபிடித்து நடைபெற்ற நிகழ்ச்சியில் சர்வதேச யுனிசெப் கவுன்சிலின் தலைவர் டாக்டர் இக்னீசியஸ் பிரபு தலைமை தாங்கினார்.கோவைபுதூர் யூத் அசோசியேஷன் தலைவர் ரதீஷ்,மற்றும் நிர்வாகிகள் ஜெகதீஸ்வரன், பாண்டியன், இம்மானுவேல் முன்னிலையில் நடைபெற்ற இதில் சிறப்பு அழைப்பாளராக குணியமுத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் பெரியார் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு அரிசி மூட்டைகளை வழங்கினார். இதில் மாநகராட்சி 90 வது வார்டு சுகாதார ஆய்வாளர் லோகநாதன்,சூபர்வைசர் ஆறுச்சாமி மற்றும் கவுன்சில் நிர்வாகிகள் டேவிட்ராஜா,சுரேஷ்,பிரபாகரன்,சதீஷ்,முரளி,பாலகிருஷ்ணன், ராகேஷ்,ராஜாராம்,மணிகண்டன்,ராஜ்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.

Be First to Comment