தென்னாப்பிரிக்காவை சேர்ந்த 20 வயது இளம் வீரர் ஒருவர் இன்று மும்பை அணியில் அறிமுகம் ஆகியுள்ளார். தென்னாபிரிக்க தேசிய அணியிலேயே இதுவரை இவர் ஆடாத நிலையில் இன்று மும்பை அணியில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் மும்பை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான முதல் ஐபிஎல் போட்டி இன்று நடக்கிறது. இதில் மும்பைக்கு எதிராக பெங்களூர் அணி டாஸ் வென்றது. டாஸ் வென்ற கோலி பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளார். இதில் மும்பை அணியில் முக்கியமான மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
டாஸ் வென்ற கோலி பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளார். இதில் மும்பை அணியில் முக்கியமான மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த போட்டியில் மும்பை அணியில் டி காக் இடம்பெறவில்லை. கொரோன குவாராண்டின் காரணமாக இவர் அணியில் இடம்பெறவில்லை. இவருக்கு பதிலாக கிறிஸ் லைன் இன்று பேட்டிங் இறங்குகிறார்.
இன்னொரு பக்கம் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த 20 வயது இளம் வீரர் மார்கோ ஜென்சன் இன்று மும்பை அணியில் அறிமுகம் ஆகியுள்ளார். இவர் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த முதல் தர வீரர் ஆவார். இதுவரை சர்வதேச போட்டிகளில் இவர் ஆடியது இல்லை.
பயிற்சி ஆட்டங்களில் பல முறை மார்கோ ஜென்சன் விக்கெட் எடுத்துள்ளார். முக்கியமாக கோலி இவரின் பவுலிங்கில் கடுமையாக திணறி உள்ளார். கோலியை குறி வைத்து இவரை அணியில் எடுத்து இருக்கலாம் என்கிறார்கள். இதனால் தற்போது மார்கோவை ரோஹித் அணியில் எடுத்துள்ளார். இவருக்கு வெறும் 20 வயதுதான் ஆகிறது.
Be First to Comment