தேனி மாவட்டம் சுருளியாரு மின் நிலைய வனப்பகுதி சோதனை சாவடியில் பணியிலிருந்த வனத்துறை பணியாளர் தொடர் பணிச்சுமையின் காரணமாக மாரடைப்பால் மரணம் அடைந்த சம்பவம் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் நகரில் திருவள்ளுவர் காலனியில் குடியிருந்தவர் கணேஷ் பாண்டியன் (எ) ராஜா (32) கடந்த 7 வருடங்களாக வேட்டை தடுப்பு காவலராக கம்பம் கிழக்கு வனத்துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார்.
இவர் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பணியில் இருந்து வந்துள்ளார்.
இதுதொடர்பாக வீட்டிலும் தொடர் பணியினால் மன உளைச்சலுடன் காணப்பட்டுள்ளார். இந்த நிலையில் பெரியார் மின் நிலைய பகுதியில் உள்ள முட்னாரி வனத்துறை சோதனை சாவடியில் வழக்கம் போல் பணியில் இருந்த போது அதிகாலை நெஞ்சு வலி ஏற்பட்டு சக ஊழியர்களிடம் தொடர்பு கொண்டு நெஞ்சுவலி என கூறியுள்ளதாக தெரிகிறது.
சக ஊழியர்கள் வந்து பார்க்கும் பொழுது அவர் சம்பவ இடத்தில் மரணம் அடைந்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
மரணமடைந்த அவரை ஆம்புலன்ஸ் மூலம் கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு சோதனை செய்த மருத்துவர்கள் மாரடைப்பால் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். வன ஊழியர் பணியின் போது பணிச்சுமை காரணமாக மன உளைச்சலால் மாரடைப்பால் மரணம் அடைந்த சம்பவம் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Be First to Comment