Press "Enter" to skip to content

”தேர்தலில் கூட்டணி மாறினாலும், கொள்கைகள் மாறாது” முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தேர்தலில் கூட்டணி மாறினாலும், கொள்கைகள் மாறாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கோவை கொடிசியா அரங்கில் தமிழக கிறிஸ்துவ ஜனநாயக கூட்டமைப்பின் மாநில மாநாடு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கிறிஸ்தவ மக்களின் கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்பட்டு நிறைவேற்றி தரப்படும் எனத் தெரிவித்தார். ஜெருசேலம் பயணத்திற்கான தொகை 25 ஆயிரத்தில் இருந்து 37 ஆயிரமாக உயற்றப்படும் எனவும், ஜெருசேலம் செல்பவர்கள் எண்ணிக்கை 500 லிருந்து 1000 நபராக உயர்த்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார். தமிழகத்தில் கல்வி உயர்ந்த நிலையில் இருக்க கிறிஸ்துவர்களின் பள்ளிகள் மிக முக்கியமான காரணம் எனவும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் தன்னுடைய மகன் கிறிஸ்துவ பள்ளிகளில் தான் படித்தனர் எனவும் அவர் தெரிவித்தார்.

சிறுபான்மை மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை எனவும், அனைத்து மத நிகழ்வுகளில் அதிமுகவினர் கலந்து கொள்வார்கள் எனவும் அவர் தெரிவித்தார். தேர்தலில் கூட்டணி மாறினாலும், கொள்கைகள் மாறாது எனவும், கழக வழியில் அரசு நடைபெறுகிறது எனவும் கூறிய அவர்,தமிழ் மண்ணில் பிறந்தவர்கள் யாரும் அச்சபட தேவையில்லை எனத் தெரிவித்தார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications    OK No thanks