குறிச்சியில் தே.மு.தி.க அவைத்தலைவர் கார் மீது மர்ம நபர்கள் தீ வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குறிச்சியை சேர்ந்த சின்னசேட் என்பவர் குறிச்சி பகுதி தே.மு.தி.க அவைத்தலைவராக உள்ளார். வழக்கம்போல் வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த சின்னசேட் கார் மீது நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் தீ வைத்துவிட்டு தப்பி சென்றனர். அக்கம் பக்கத்தினர் சத்தம் கேட்டு வெளியே வந்த அவர் வாகனம் எரிந்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். வாகனத்தின் மீது தண்ணீர் ஊற்றி தீ-யை அணைத்தார். காரின் பின்பாகம் பெரும்பகுதி சேதமடைந்துள்ளது.

இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Be First to Comment