அகில பாரத மக்கள் கட்சியினர், கோவை மாவட்ட அலுவலகத்தில் கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பந்தமாகவும், மாடு கடத்தல் சம்பந்தமாகவும் மனு அளித்தனர். இது குறித்து பேசிய அகில பாரத மக்கள் கட்சியின் தலைவர் S ராமநாதன், கோவையில் இருந்து பிற மாநிலங்களுக்கு அதிகமாக மாடுகள் கடத்தப்படுவதாகவும், அதிலேயே வரும் வருமானத்தை வைத்து தீவிரவாத செயல்களுக்கு செலவிடுவதாகவும், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

அதனை தொடர்ந்து பேசிய சிவசேனா அமைப்பின் மாநில துணை தலைவர், புலவஞ்சி போஸ் , 1998 குண்டு வெடிப்பில் கோவை நகரம் சுடுகாடு போல் காட்சி அளித்ததாகவும், தற்போது நடைபெற்றுள்ள இச்சம்பவத்தில் ஈடுப்பட்டுள்ளவர்கள் சர்வதேச தீவிரவாதிகள் எனவும், இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டுமென கூறினார். பின்னர் இந்து அதிரடி படை தலைவர் ராஜகுரு, இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை மட்டுமே வழங்கப்படுவதாகவும், தூக்கு தண்டனை கொடுத்தால் மட்டுமே இதற்கு தீர்வு காண் முடியும் என தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் சிவசேனா மாநில துணை தலைவர் புலவஞ்சி போஸ், இந்து அதிரடிப்படை நிறுவன தலைவர் ராஜகுரு, அகில பாரத மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் இளந்தென்றல் சிவா, மாவட்ட துணை தலைவர் சேகர், மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன், வடவள்ளி மண்டல தலைவர் விணோத், வடவள்ளி மண்டல பொருளாளர் ஸ்ரீராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Be First to Comment