கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அப்பர் ஆளியார், காடம்பாறை போன்ற அணைகளில் இருந்து ஆழியார் அணைக்கு நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. மேலும் ஆழியார் அணை முழு கொள்ளளவு 120 அடியில் 118 அடியை எட்டியுள்ளது. அணைக்கு தற்பொழுது வினாடிக்கு 1100 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால், ஆயிரத்து 36 கன அடி உபரி நீர் மூன்று மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

மழையின் அளவு அதிகரித்துக் கொண்டே இருப்பதால் தொடர்ந்து பொதுப்பணி துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். இதனால் ஆழியார் ஆற்றின் கரையோரம் உள்ள பொதுமக்கள் துணி துவைக்க, குளிக்க, ஆற்றுப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என பொதுப்பணித்துறை காவல்துறை மற்றும் வருவாய் துறை மூலம் அறிவுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Be First to Comment