இன்று காலை பெங்களூருவிலிருந்து சென்னை புறப்பட்டார். அவருக்கு வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகிறார்கள்.

‘கடந்த 35 ஆண்டுகளாக ஜெயலலிதாவுக்கு தோழியாக இருந்தவர் சசிகலா. சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தார். இன்று தமிழகம் திரும்புகிறார். ஓசூரின் ஜூஜூவாடி பகுதியில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. வழிநெடுகிலும் பேருந்துகளில் பேனர்கள், போஸ்டர்கள் வைக்கப்பட்டன.

தமிழக எல்லையில் சசிகலாவுக்கு ராட்சத மாலை அணிவித்தனர். செண்டை மேளங்கள் முழங்க ஆட்டம் பாட்டத்துடன், ஆரத்தி தட்டுகளுடன் பெண்களும் தொண்டர்கள் வரவேற்றனர். இதுமட்டுமின்றி பல்வேறு பகுதியில் பெண்கள் பால்குடம் எடுத்தனர்.

இந்த பிரமாண்ட வரவேற்புகளை பார்த்தால் சசிகலாவுக்கு மிகப் பெரிய ஆதரவு தமிழக அரசியலில் காத்திருக்கிறது என்றே தெரிகிறது. தலைவர் கள் வரும் போது பால்குடம் எடுப்பது, பூத்தூவுவது, கும்ப மரியாதையுடன் வரவேற்பு, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் ஆகியவைகள் ஜெயலலிதாவுக்கு கிடைப்பது போன்ற மரியாயதையும் உற்சாக வரவேற்பும் சசிகலாவுக்கு இன்று கிடைத்துள்ளது.

இதை பார்க்கும் போது தமிழக அரசியல் களத்தில் ஜெயலலிதாவை விஞ்சும் அளவுக்கு விஸ்வரூபம் எடுத்துவிடுவாரோ சசிகலா? என்ற வகையில் வழியெங்கும் பொதுமக்கள் பேசிக்கொள்கின்றனர்.
Be First to Comment