ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் மதுரை வருவதையொட்டி தெருக்களை பராமரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள மதுரை மாநகராட்சி உதவி ஆய்வாளரை கண்டித்து த.பெ.தி.கவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
22/07/2021 முதல் மதுரையில் நடக்கும் ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சிகளுக்கு வருகை தரும் ஆர் எஸ் எஸ் தலைவர் செல்லும் தெருக்கள் முழுவதையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். தெருவிளக்குகள் முழுமையாக பராமரிக்கப்பட்டு இருக்கவேண்டும். பாதையில் எந்த தடையும் இல்லாமல் மாநகராட்சி ஊழியர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று மதுரை மாநகராட்சி உதவி ஆணையாளர் உத்தரவிட்டிருக்கிறார்.

அரசு உயர் பதவியில் உள்ள ஜனாதிபதி., ஆளுநர், பிரதமர், மாநில முதல்வர் ஆகியோருக்கு செய்யப்படுகின்ற முன்னேற்பாடுகளை போல எந்த அரசுப் பதவியிலும் இல்லாத அமைப்பு தலைவருக்கு மாநகராட்சி செய்வது விதிகளை மீறிய செயலாகும்.
இந்த செயலை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் மதுரை மாவட்ட பொறுப்பாளர் தோழர் தமிழ்பித்தன் தலைமையில் மதுரை மாநகராட்சி அலுவலகம் முன் 22ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவுள்ளதாக தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் அறிவித்துள்ளார்.
Be First to Comment