தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக 12 ஆண்டுகளாக சுகுணாபுரம் மயில் கல் பகுதியில் மருத்துவ சேவை மையம் பொதுமக்களுக்காக சேவையாற்றி வருகிறது. இதை எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் வட்டாட்சியர் தலைமையில் காவல்துறை அதிகாரிகள் சேர்ந்தவர்களும் அந்த மருத்துவ சேவை மையத்தை இடித்துள்ளனர் எனக்கூறி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக கோவை சுந்தராபுரம் மெயின் ரோட்டில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர் இந்த சாலை மறியல் போராட்டத்தினால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது சாலை மறியலில் ஈடுபட்ட அனைத்து நபர்களும் காவல்துறை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.



இதை தொடர்ந்து கோவை உக்கடம்,செல்வபுரம், மேட்டுப்பாளையம், அன்னூர், சூலூர், சிங்கநல்லூர், போன்ற பகுதிகளில் சாலை மறியல் போராட்டம் தமுமுக சார்பாக நடைபெற்றது
உடனடியாக அதே இடத்தில் மருத்துவ சேவை மையம் கட்டித்தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட கைதானவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Be First to Comment