கோவை சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த பெண் போலீஸ் சுவப்னா சுஜா. பல்வேறு குற்றச் செயல்களில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 61 பவுன் நகையை கோர்ட்டில் முறைப்படி கணக்கு ஒப்படைக்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.

இது குறித்து காவல் நிலைய அதிகாரிகள் கேட்டால், முன்னுக்குப்பின் முரணான பதில் அளித்ததோடு, சில உயர் அதிகாரிகளின் பெயர்களை பயன்படுத்தி நழுவி வந்துள்ளார். நீண்ட நாட்களாக நகைகளை உரியவர்களிடம் ஒப்படைக்கப்படாமல் இருந்த நிலையில், சிங்காநல்லூர் குற்றப்பிரிவு ஆய்வாளர் சிவக்குமார் சுவப்ன சுஜாவிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இது தொடர்பாக மாநகர குற்றப்பிரிவு போலீசார், கடந்த ஜூன் 3ல், சுஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், சுவப்னா சுஜா மீது, கோவை ஜே.எம்:7 கோர்ட்டில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. சாட்சி விசாரணைக்கு வழக்கு நேற்றைக்கு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. அதன்படி, நேற்று விசாரணைக்கு வந்த போது, ஜாமினில் விடுவிக்கப்பட்ட சுவப்ன சுஜா ஆஜரானார். அரசு தரப்பில் சாட்சிகள் வராததால், விசாரணை வரும் 18-க்கு ஒத்திவைக்கப்பட்டது.
Be First to Comment