Press "Enter" to skip to content

நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதி

நடிகர் விவேக் நேற்று (15.04.2021) சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விவேக், “அரசு மருத்துவமனைகள்தான் பெரும்பாலான மக்களுக்கு மருத்துவ சேவையைக் கொண்டு செல்கின்றன. நிறைய மக்களிடம் தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாமா, பக்கவிளைவுகள் ஏற்படுமா என்பது குறித்து நிறைய சந்தேகங்கள் உள்ளன. தடுப்பூசி போடுவதால் எந்தவித ஆபத்தும் இல்லையென பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் நோக்கத்தோடு நான் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திக்கொண்டேன்” எனக் கூறினார்.


இன்று, நடிகர் விவேக் திடீர் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது விவேக்கிற்கு இதயம் மற்றும் நுரையீரல் செயல்பாட்டை சீர்செய்ய எக்மோ சிகிச்சை அளிக்கப்படுகிறது. நடிகர் விவேக் சுயநினைவுடன் இருக்கிறார் என செய்தி தொடர்பாளர் நிகில் முருகன் தெரிவித்துள்ளார்.

More from தமிழகம்More posts in தமிழகம் »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications    OK No thanks