Press "Enter" to skip to content

நம்ம தான் ஜெயிக்கிறோம், நம்ம மட்டும் தான் ஜெயிக்கிறோம்

தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை தமிழக மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிமுகம் செய்து வைத்தார்.

பொள்ளாச்சி, ஈச்சனாரி, குனியமுத்தூர், மசக்காளிபாளையம், கவுண்டம்பாளையம், மேட்டுப்பாளையம் பகுதிகளில், நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்zzபோக்கு கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில், தி.மு.க மற்றும் கூட்டணி வேட்பாளர்களை தமிழக மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிமுகம் செய்து வைத்தார்.

இதைத்தொடர்ந்து, அமைச்சர் பேசுகையில்;-

கோவை மாநகராட்சியில் 100 இடங்கள், 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகள், வருவாய் மாவட்டத்தில் இடங்களில் 811 இடங்களில் தேர்தல் நடைபெறுகின்றது. நமது இடத்தில் 100 சதவீதம் வெற்றி பெற்றோம் என்ற நிலையை நாம் கொண்டு வர வேண்டும்.

தி.மு.க வின் சாதனைகளை, 8 மாத காலத்தில் வரலாற்று சிறப்பு மிக்க சாதனைகளை முதல்வர் செய்துள்ளார். இதை மக்கள் மத்தியில் நீங்கள் கொண்டு செல்ல வேண்டும். பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், ஆவின் பால் விலை குறைப்பு, நகைகடன் தள்ளுபடி, மக்களை தேடி மருத்துவம், வீடு தேடி கல்வி, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் என முதல்வர்களுக்கெல்லாம், முதல்வராக தமிழகத்தில் நல்லாட்சியை தந்து கொண்டுள்ளார் நமது முதல்வர். இந்த சாதனைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்லுங்கள், முதியோர் உதவித்தொகை, சாலை போட வேண்டுமா? என அனைத்து அடிப்படை வசதிகளையும் நாம் மக்களுக்கு செய்யலாம், அதை மக்களிடம் கூறி வாக்கு கேளுங்கள். நாம் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும். வீடு வீடாக சென்று வாக்கு சேகரியுங்கள். நமக்கு வாக்களிக்க மக்கள் தயாராக உள்ளனர். அதை வாக்குகளாக மாற்ற வேண்டியது அவசியம். நம்மால் முடியும், “நம்ம தான் ஜெயிக்கிறோம், நம்ம மட்டும் தான் ஜெயிக்கிறோம்”. என்று பேசினார்.

இந்த அறிமுக கூட்டங்களில் கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக், மாநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பையா ஆர்.கிருஷ்ணன், புறநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி, வடக்கு மாவட்ட பொறுப்பாளர் சிஆர்.இராமச்சந்திரன், தெற்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர்.வரதராஜன் மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த காங்கிரஸ் செயல்தலைவர் மயூரா ஜெயக்குமார், மதிமுக ஆர்ஆர்.மோகன்குமார், கம்யூனிஸ்ட் சுந்தரம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தனபால் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர்.

More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications    OK No thanks