இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்து ரௌடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படங்களைத் தயாரித்து வருகின்றனர். ‘நெற்றிக்கண்’, ‘கூழாங்கல்’, ‘சாணிக்காயிதம்’ உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ள இந்நிறுவனம் தற்போது இயக்குநர் அஸ்வின்குமார் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் ‘கனெக்ட்’ படத்தையும், குஜராத்தில் மொழியில் உருவாகும் ‘சுப் யாத்ரா’ படத்தையும் தயாரித்து வருகிறது.

ரவுடிகளை ஊக்கப்படுத்தும் விதமாக ரௌடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்திற்கு பெயர் வைத்துள்ள நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனை கைது செய்ய வேண்டுமென்று சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். சமூக ஆர்வலரான இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
Be First to Comment