ஆடி மாதம் கடைசி வெள்ளியை முன்னிட்டு போத்தனூர் நாகபத்ரகாளியம்மன் திருக்கோவிலில் அம்மனுக்கு காய்கறியில் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதம் என்பது ஐதீகம். அந்த மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வழிபட்டால் எண்ணியவை ஈடேறும்.இந்த நிலையில் குறிச்சி பகுதியிலுள்ள போத்தனூர் அருள்மிகு நாகபத்ரகாளியம்மன் திருக்கோவிலில் ஒவ்வொரு ஆடி வெள்ளி கிழமையும் சிறப்பான அலங்கார வழிபாடு நடத்தப்பட்டு வரும் நிலையில் இன்று ஆடி மாத கடைசி வெள்ளி என்பதால் காய்கறி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
Be First to Comment