Press "Enter" to skip to content

நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தல் வந்தால் நாங்கள் பொறுப்பல்ல – பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை

இந்து விரோத போக்கை தி.மு.க அரசு கடை பிடிப்பதாக கூறியும்,பா.ஜ.க நிர்வாகிகள், தொண்டர்களை கைது செய்ததை கண்டித்தும் தமிழக பா.ஜ.க சார்பில் கோவை சிவானந்த காலனியில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அண்ணாமலை பேசுகையில், “ஸ்டாலின் 10 ஆண்டுகளாக முதல்வராக வருவதுதற்கு காத்திருந்தார்.
ஆனால் எல்லோருக்கும் சமமானவராக இருப்பேன் என்றார். ஆனால் களவரத்திற்க்கு காரணமானவர்கள் பற்றி இதுவரை பேசவில்லை. என்றும் கூறிய அண்ணாமலை,
மத்திய அரசு 5 நாட்களுக்கு முன் இந்தியாவின் 105  இடங்களில் PFI நிர்வாகிகள் வீட்டுகளில் சோதனை செய்தார்கள்.
அதில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அது போன்று விரைவான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளதாக தெரிவித்தார்.
முதல்வர் ஒரு கடவுள் அல்ல. என்றும் முதல்வர் வீட்டில் பாத்திரம் கழுவ அமைச்சர்கள் காத்திருக்கிறார்கள்.
கோபாலபுரத்தில் பாத்திரம் கழுவி தான் கேபினட் அமைச்சராக வேண்டும் என்கிற எண்ணம் எங்களுக்கு இல்லை. நாங்கள் அப்படி செய்ய வேண்டியதில்லை. ஏனென்றால் நாங்கள் பா.ஜ.க வினர். என்று தெரிவித்தார்.

ஆ.ராசா பேச்சை ஒட்டி வெட்டி பேசுவதாக முதல்வர் கூறுவது ரொம்ப மோசமானது. என்று தெரிவித்த அவர்
2 ஜி ஊழல் வாதி, தான் தொடர்ச்சியாக ஊழல் செய்யவில்லை என்று சொல்லி கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

மேலும் இதுபோன்ற தொடர் அவதூறு பேச்சுகள் தி.மு.க வுக்கு புதிதல்ல. அடுத்த என்ன பிரச்சனை செய்யலாம் என்று அறிவாலயத்தில் தலைமையோடு அமைச்சர்கள் பேசி கொண்டிருப்பார்கள்..
ஒன்றை மறைக்க மற்றொரு பிரச்சனை எழுப்புகிறார்கள். என்று தெரிவித்த அண்ணாமலை,

ஆ.ராசா, தந்தை பெரியார் சொன்னாதாக உள்ள அதே புத்தகத்தில் பக்கம் 21 ல் சொல்லிருப்பது என்னவென்றால். ஓட்டுக்காக பொண்டாட்டி , புள்ளைய கூட வித்து விடுவான் போல இந்த முன்னெற்ற காரணங்க என்று சொல்லிருக்கிறார்கள். இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். என்று பெரியாரே கூறுயிருக்கிறார் என்று அவர் தெரிவித்தார்..

மேலும் தி.மு.க அமைச்சர்கள் பேசுகின்ற பேச்செல்லாம் வீட்டில் ஒரு வேலைக்காரரிடம் எப்படி உரிமையோடு பேசுவோமோ அது போல. அப்படி தான் மேயரை நடத்துகிறார்கள்.
இதுவரை oc என்று சொன்ன அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை இல்லை.
குறவர் இனத்தைச் சேர்ந்த நிர்வாகிகளை நிற்க வைத்து பேசிய எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் மேல் நடவடிக்கை இல்லை. மிரட்டி பணம் வசூலித்த எம்.எல்.ஏ மீது நடவடிக்கை இல்லை என்று கூறிய அண்ணாமலை,

கோவையில் பரம்பிகுளம் அணையில் மதகு உடைந்ததிற்க்கு காரணம் என்னவென்றால்..
அணைகளை  பராமரிக்க ஆண்டுக்கு ஒரு அணைக்கு ஒரு கோடி ஒதுக்குவார்கள். ஆனால் இன்று கமிஷன் அடித்தது போக இந்த ஆண்டுக்கு அந்த அணைக்கு 15 லட்சம் தான் ஒதுக்கியுள்ளார்கள். மீதமுள்ள 85 லட்சத்தை கொள்ளையடித்ததால் முழுமையான பராமரிப்பு இல்லாமல் அணையின் மதகு உடைந்ததாக அவர் தெரிவித்தார்.

அதேபோல் ஸ்டாலினுக்கும் – கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு என்ன உறவு என்று தெரியவில்லை.
நீர் பிரச்சனையில் டீலிங் வைத்து பேசி கொண்டிருக்கிறார்கள். என்று அவர் கூறினார்.

கோவையில் உள்ள பொறுப்பு அமைச்சராக உள்ள செந்தில்பாலாஜி  மின்சாரத் துறையில் ஊழல், கோவை மாநகராட்சியில் டெண்டர் விடுவதில் ஊழல் இப்படி விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்து கொண்டிருக்கிறார்.
கோபாலபுரத்தைக் பணத்தால் நிரப்பி கொண்டிருக்கிறார். என்று தெரிவித்த அண்ணாமலை,
எங்கள் தொண்டர்கள் மீது கை வைத்த காவல் துறையினருக்கு நான் சொல்ல வேண்டியது என்னவென்றால்.
ரிட்டர்மெண்ட காலத்தில் உங்களுக்கு பென்சன் வரவில்லை என்றால் நாங்கள் பொறுப்பல்ல..
நீங்கள் ஏன் காக்கி சட்டை போட்டோம் என்று வருத்தபடுவீர்கள். என்று தெரிவித்த அண்ணாமலை,
இதுபோன்ற நிலை தொடர்ந்தால் முதல்வரின் வீட்டை முற்றுகையிடவும் நாங்கள் தயாரக உள்ளோம்.
அனைவருக்கும் சமமான முதல்வராக ஸ்டாலின் இருக்க வேண்டும். குறிப்பாக  5 ஆண்டுகளை ஸ்டாலின்  முழுமையாக ஆட்சி செய்து முடிக்க பாருங்கள் இல்லையென்றால்
2024 – ல் நாடாளுமன்றத் தேர்தலோடு ,சட்ட பேரவை தேர்தல் வந்தால் நாங்கள் பொறுப்பல்ல. என்று அவர் தெரிவித்தார்.

photo courtesy : Vikatan

More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications    OK No thanks