ராமேஸ்வரம் கூட்டுப் பாலியல் வன்கொடுமை படுகொலைக்கு நீதி கேட்டும், வேற்று மாநில தொழிலாளர்களுக்கு உள்நுழைவு சீட்டை அறிமுகப்படுத்த கோரியும், இராமேஸ்வரம் பாலியல் கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு அரசு வேலை மற்றும் ஒரு கோடி ரூபாய் துயர்துடைப்பாக வழங்க கோரியும், வதை முகாம் என்ற பெயரில் சிக்குண்டுள்ள ஈழத் தமிழர்களை விடுதலை செய்யக் கோரியும், சிறையில் உள்ள அப்பாவி 6 தமிழர் விடுதலையை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த கோரியும், ராமேஸ்வரம் சம்பை, மாங்காடு,வடகாடு, தண்ணீர் ஊற்று போன்ற இடங்களில் உள்ள இறால் பண்ணைகளை மூடக்கோரியும், கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதை ரத்து செய்யக் கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நாம் தமிழர் கட்சி கிணத்துக்கடவு தொகுதி சுந்தராபுரத்தில் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு பேச்சாளர்களாக மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர்களான காளியம்மாள், கோவை கார்த்திகா, சிங்கை நர்மதா, பேராசிரியர் பொன் கவுசல்யா, மாநில ஒருங்கிணைப்பாளரான ஸ்ரீராம், எட்டிமடை பொறுப்பாளர் தினேஷ், கிணத்துக்கடவு மாணவர் பாசறை பொறுப்பாளர் சாரூக் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை பொள்ளாச்சி நாடாளு மன்ற பொறுப்பாளர் மருத்துவர் சுரேஷ், கோவை மேற்கு மாவட்ட தலைவர் மதுக்கரை ஆனந்தன் மற்றும் கிணத்துக்கடவு தொகுதி பொறுப்பாளர்கள் ஜீவானந்தம், அசோக்குமார் செல்வகுமார் ராமகிருஷ்ணன், கிரண், தாமஸ், மணி ஆனந்தன் , சேக் அப்துல்லா ஆகியோர் ஒருங்கிணைத்தார்கள்.

மேலும் இதில் கோவை நாடாளுமன்ற பொறுப்பாளரான அப்துல் வகாப், கிணத்துக்கடவு முன்னாள் சட்டமன்ற வேட்பாளர் உமா ஜெகதீஸ்,கோவை மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் ரூபன், குருதிக்கொடை பாசறை பொறுப்பாளர் மணிமாறன், கிணத்துக்கடவு தொகுதி சுற்றுச்சூழல் பாசறை பொருப்பாளர் தங்கவேல், மலுமிச்சம்பட்டி பொறுப்பாளர்களான கதிர் பிரபாகரன் சீனிவாசன், பிரவீண், ஒத்தக்கால்மண்டபம் பொறுப்பாளர்களான கார்த்திக் ராஜா, 94 வது பகுதி பொறுப்பாளர் சக்திவேல், 97 வதுபகுதி பொறுப்பாளர் பூலோகம், 98 ஆவது பகுதிப் பொறுப்பாளர் தீரன் கார்த்திக், 100வது பகுதி பொறுப்பாளர் மயில்வாகனம் மற்றும் பல்வேறு ஒன்றிய பொறுப்புகள், பகுதி பொறுப்புகள், பாசறை பொறுப்புகளில் இருந்தும் திரளாக ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
Be First to Comment