நாம் தமிழர் கட்சி சார்பில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கும் திட்டம் 20 வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவுறுத்தலின்படி கோவை கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சுந்தராபுரம் பகுதி முதல் கிணத்துக்கடவு பகுதி வரை உள்ள சாலையோர ஆதரவற்றோருக்கு உணவு உறுதி திட்டம் துவங்கப்பட்டு தொடர்ந்து மதிய உணவுகள் சுமார் 100 பேருக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இது குறித்த கிணத்துக்கடவு தொகுதி நாம் தமிழர் கட்சி உணவு உறுதி திட்ட நிர்வாகிகள் அசோக்குமார் மற்றும் ராஜ்குமார் கூறுகையில் ”உணவின்றி தவிக்கும் சாலையோர ஆதரவற்றோர் முதியோர் ஊனமுற்றோர் ஆகியோர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அனுமதியுடன் கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சுந்தராபுரம் பகுதி முதல் கிணத்துக்கடவு பகுதி வரை சுமார் 100 பேருக்கு தினமும் உணவு, முககவசம், தண்ணீர் பாட்டில்கள் வழங்கி வருகிறோம். இந்த பணியானது தொடர்ந்து நடைபெறும் என்று கூறினர்.
Be First to Comment