சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி சிறைலிருந்த சசிகலா தற்போது சிகிச்சைக்காக பெங்களூர் மருத்துவமனையில் இருக்கிறார். அவ்வப்போது சசிகலா விரைவில் விடுதலை ஆவார் என்ற செய்தி வரும். அப்போதெல்லாம் அந்த செய்தி தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரிது விவாத பொருளாக மாறும்.

பலரது எதிர்பார்ப்பின்படி அவரது விடுதலை பற்றி அ.ம.மு.க பொதுச்செயலாளார் டி.டி.வி.தினகரன் அது தொடர்பாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் ” நம் அனைவருடைய எதிர்பார்ப்பின்படி தியாகத்தலைவி சின்னம்மா அவர்கள் நாளை மறுநாள் 27.01.2021 அன்று விடுதலையாகிறார். கொரோனா தொற்றினால் ஏற்பட்ட பாதிப்பு வெகுவாக குறைந்து அவர்கள் உடல்நிலை தேறி வருவதால், மருத்துவர்களின் உரிய ஆலோசனை பெற்று பெங்களூரு மருத்துவமனையில் இருந்து வரும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். என ட்வீட் செய்துள்ளார்.
Be First to Comment