கோவை சிட்கோ தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் நலசங்கமான கொசிமா நிதிநிலை குறித்த நிறை, குறைகளை வெளியிட்டுள்ளது.
1.தமிழக அரசின் 2022-23ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், தமிழகம் முழுவதும் பரவலாக தொழிற்பேட்டைகளை ஏற்படுத்தி ரூ. 50 ஆயிரம் கோடி அளவிலான தொழில் முதலீடுகளை ஈர்க்க எடுத்த நடவடிக்கைக்கு பாராட்டுகின்றோம்.
2.ஏற்றுமதியை ஊக்குவிக்க ரூ. 100 கோடி சிறப்பு நிதியை ஏற்படுத்தி உள்கட்டமைப்பு வசதிகளுக்கு நிதி ஒதுக்கியதை வரவேற்கிறோம்.
3.சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான முதலீட்டு மானியம் 300 கோடி ஒதுக்கியதை வரவேற்கிறோம்.
4.761 தொழிற் பயிற்சி நிறுவனங்களை மேம்படுத்த ரூ. 2877 கோடியில் சிறப்புத் திட்டத்தை வரவேற்கிறோம்.
ஏமாற்றம் அளிப்பவை:-
1.குறுந்தொழில்களுக்கு என தனி தொழில்பேட்டை ஏற்படுத்த எந்த அறிவிப்பும் இல்லை.
2.திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையங்கள் ஏற்படுத்த எந்த திட்டமும் இல்லை.
3.குறுந்தொழில்களுக்கான மின் கட்டணத்தில் சலுகைகள் இல்லை.
Be First to Comment