தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று கோவை கலெக்டரிடம் அளித்த மனுவில் : கோவை மாவட்டம், சூலூர் தாலூக்கா, பீடம்பள்ளி கிராமத்தில் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேல் தண்ணீர் பாதையாக 15அடி ஆழம் உள்ள பஞ்சாயத்துக்கு சொந்தமான ஓடை பள்ளத்தை, தனிநபர் தன் சொந்த பூமியை மனைகளாக பிரிப்பதற்காக ஓடைப் பகுதியை மண்ணைப் போட்டு ஆக்கிரமிப்பு செய்துள்ளதார்.

இதனால் அருகில் உள்ள விவசாய பூமிகளில் மழைக்காலங்களில் மழைநீர் உள்ளே புகுந்து மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. விவசாய நிலங்கள் குண்டும், குழியுமாக மாறியதால் விவசாயம் செய்யமுடியாத அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தனியார் ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தவும், ஆக்கிரமிப்பு செய்த பகுதியை அப்புறப்படுத்தி மழைநீர் தங்கு தடையில்லாமல் சீராக செல்வதற்கு வழிவகை செய்திட கோரி மனு அளித்தனர்.
Be First to Comment